☰
×

சென்னை வந்தார் பிரதமர் மோடி!
 

 

 

 

ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே, 15 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து, அதில் பிரதமர் பயணம் செய்கிறார். அவருடன் முதல்வர் விஜயும் பயணம் செய்கிறார். சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கும் நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' நிறுவன அதிபர்களை சந்தித்து, மோடி கலந்துரையாடுகிறார். தெற்கு ரயில்வேயில், 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கிறார். பின்னர், இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
பணிகள் நிறைவடைந்த சாலை திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும், 4,900 கோடி ரூபாயில் பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே அமைக்கப்பட்டுள்ள, 11 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், 482 கோடி ரூபாய் மதிப்பில், நிலக்கரி கையாளும் கப்பல் தளம் மற்றும் பொது சரக்கு கையாளும் கப்பல் தளத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.இதேபோல், மணலியில் உள்ள சி.பி.சி.எல்., கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில், 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும், 'லுாப் ஆயில்' தயாரிப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பங்கேற்கிறார்.