×

“தமிழக மக்கள் பாசமானவர்கள்” சகோதரரை தூது அனுப்பிய பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யான்கரி யோஜனா பிரகார் பிரசார் அபியான் என்ற தன்னார்வ அமைப்பின் அகில இந்திய தலைவர் பிரகலாத் தாமோதரதாஸ்மோடி, தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காலை சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மதுரைக்கு சென்ற பிரகலாத் மோடி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களை மக்களிடம் கொண்டு
 

பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யான்கரி யோஜனா பிரகார் பிரசார் அபியான் என்ற தன்னார்வ அமைப்பின் அகில இந்திய தலைவர் பிரகலாத் தாமோதரதாஸ்மோடி, தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காலை சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து மதுரைக்கு சென்ற பிரகலாத் மோடி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள் தடையாக இருக்கின்றனர். பிரதமர் திட்டங்களிலிருந்து மக்களை விலக்கி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பிரதமரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 22லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில், மேலும் உறுப்பினர்களை அதிகப்படுத்த உள்ளோம். ஜன் கல்யாண்கரி யோஜனா திட்டத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்போம். இந்த யோஜனா திட்டம் இல்லாமல் 40 யோஜனா திட்டங்களையும் செயல்படுத்துவோம். மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். தமிழக மக்கள் பாசமானவர்கள். மதுரைக்காரர்கள் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி. விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். ஆனால் அது கீழ் மட்டம் வரை செல்வதில்லை.

விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். ஒரே நாளில் இந்த திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு போய் சேர்க்க முடியாது” எனக் கூறினார்.