புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சென்னையில் உள்ள பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.