×

பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!

 

மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக வளர்ந்த பாரதம் - ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி திட்ட மசோதா( விக்சித் பாரத் ஜி ராம் ஜி) பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது. புதிய மசோதாவில் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 

மாநில அரசுகள் 40 சதவீத அளவுக்கு நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டது. விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் இம்மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
 

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் இந்த மசோதா சட்டமாகியுள்ளது.