×

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிப்பு..!

 

ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி, மத்திய அரசு சார்பில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு, நாடு முழுவதும் 48 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா, புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் ஆகிய 2 பேர் அடங்குவர். இவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் நடந்த விழாவில் விருதுகளை வழங்கி கவுரவித்து, பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.