ரூ.5,000 கோடி பணமோசடி வழக்கில் முதல்வருக்கு நெருக்கமான பிரேம்குமார் கைது!
ரூ.5,000 கோடி பணமோசடி வழக்கில் கைதிலிருந்து தப்பிக்க பிரேம்குமார் நெஞ்சுவலி நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய்யின் நண்பர் BLM பிரேம்குமார், கேரளா போலீசாரால் பொருளாதாரக் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 5000 கோடி பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக கேரள காவல்துறை அவரை கைது செய்துள்ளது. சென்னையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி என பிரேம்குமார் கூறியதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், மீண்டும் விசாரணைக்காக கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடல்நலக் குறைவு என இரண்டு முறை பிரேம்குமார் ஆடிய நாடகம் தோல்வியடைந்தது.
இந்த பிரேம்குமார், கரூர் சம்பவத்துக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜயைச் சந்திக்க சென்னைக்கு அழைத்துவர 5 ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த 5 பேருந்துகளும் பிரேம்குமார் அல்லது அவரது நிறுவனத்துடன் தொடர்புடையவை என்றும், அவை TVK சார்பில் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகளின் உண்மையான உரிமையாளர் யார்? அவற்றை TVK-க்கு ஏற்பாடு செய்தது யார்? பிரேம்குமார்–TVK இடையே ஏதேனும் அதிகாரப்பூர்வ அல்லது நிதி தொடர்பு இருந்ததா? என்பகேள்விக்குறியே!