×

''முதலமைச்சர் விஜய் கார் பிரியர்..'' - பிரேமலதா விஜயகாந்த்

 

முதலமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர், அவரை சிறுவயதில் இருந்து எங்களுக்கு தெரியும் என தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர், அவரை சிறுவயதில் இருந்து எங்களுக்கு தெரியும். தவெகவில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அவர் கார் கொடுத்திருக்கிறார். இந்த வரிசையில் பாருங்கள், எல்லாம் வெளிநாட்டுக் கார்கள் தான் இருக்கின்றன. இல்லாதவர்களுக்கு கார் கொடுத்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், நிறைய பேருக்கு கார் இருக்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் தருவதற்குப் பதில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்திருக்கலாம்

விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். திட்டக்குடி, நெய்வேலி, விருத்தாசலத்தில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு செல்லும் தூரம் அதிகமாக உள்ளது. எனவே விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் அறிவிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.  விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும் ரேஷன் கடைகளைப் புதுப்பிக்கவும் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒரு நிலைபாட்டை நாம் எடுத்தால் அதில் உறுதியாக இருந்தால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். நம்ம முதலமைச்சர் தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது.தனது நிலைபாட்டை மாற்றக்கூடாது. இங்கு ஒரு நிலைபாடு, அங்கு ஒரு நிலைபாடு என்றால் மக்கள் எதை நம்புவார்கள்” என்றார்.