“என்கவுன்டர் தான் இதற்கு தீர்வு”- பேரவையில் தெறிக்கவிட்ட பிரேமலதா! அதிர்ச்சியில் விஜய்
பெண்கள் தங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா, “நான் கல்லூரி படிக்கும் போது ஒரு தேசிய தடகள வீராங்கனை. விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை வீராங்கணையாக உணர்ந்திருக்கிறேன். கல்லூரியில் படிப்பவர்களுக்கு வெறும் படிப்பு மட்டும் இல்லாமல் ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்’ இருக்க வேண்டும். இளைஞர்களை கஞ்சா போதையில் இருந்து மீட்டெடுத்து அவர்களை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை அதிகரிக்கிறது.. இது கலாச்சார சீரழிவு. இதற்கு முக்கிய காரணம் போதைதான். என்கவுன்டர் தான் இதற்கு தீர்வு. பெண்கள் தங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மிக மோசமான நிலையில் அரசு கட்டடங்கள் இருப்பதால் பராமரிக்க வேண்டும். விருத்தாசலம்-வயலூர் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சிறந்த சாலையை உருவாக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் மேம்பாலங்கள் பராமரிப்பு இல்லாமல் வெடிப்பு விட்டு செடிகள் முளைத்து கிடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்து அரசே நேரடியாக அதனை கவனிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.