×

இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் பிரேமலதா!

 

சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தே.மு.தி.க..

தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகள் தருவதாகவும் தே.மு.தி.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய மந்திரி பதவியை கூடுதலாக கேட்கிறது.

அதிக தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்க காரணம், அக்கட்சியில் பலர் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார்கள். 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களாக இருந்த மோகன்ராஜ் (சேலம் தொகுதி), பார்த்தசாரதி (விருகம்பாக்கம்), வெங்கடேசன் (விழுப் நல்லதம்பி (எழும்பூர்), சுபா (கெங்கவல்லி) ஆகியோர் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள்.

இதேபோல், கட்சியின் மாநில அவைத் தலைவர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் போட்டியிட விரும்புகிறார்கள். இதுபோக, பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய் பிரபாகரன், அவரது சகோதரர் எல்.கே.சுதீசும் தேர்தல் களம் காண்பார்கள் என்பதால், தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் தேவைப்படுகிறது. ஆனால், எந்தக் கூட்டணியும் இதற்கு உடன்படாததால், முடிவு எடுக்க முடியாமல் தே.மு.தி.க. திணறுகிறது. அதே நேரத்தில், பிரேமலதாவும் விஜயகாந்த் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம்.