“அறைக்குள் இருந்து அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல! வெற்றியே நமது இலக்கு”- பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என நீங்கள் கவலைப்பட வேண்டாம், Be cool no tension என நிர்வாகிகள் மத்தியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.
சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தேமுதிக பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என நீங்கள் கவலைப்பட வேண்டாம், Be cool no tension. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து தேமுதிக நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி அமையும். கூட்டணி அறிவிப்பு வெளியாகும்போது தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாறை தேமுதிக உருவாக வேண்டும். உங்களை தொண்டர்களாக பெற்றதுதான் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த பாக்கியம். மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறோம். 4க்கு அறையில் அமர்ந்து அரசியல் செய்யவில்லை. அடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி ஒன்றே நமது இலக்கு. நாம் களத்தில் சென்று, அரசியல் செய்கிரோம். மஞ்சள் புடவையை கட்டிய அனைவரும் லேடி கேப்டன்களாக தெரிகிறீர்கள். என்னுடைய இன்றைய நிர்வாகிகள் நாளைய கவுன்சிலர்கள், துணை மேயர்கள்.
விஜயகாந்த் அவர்கள் கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டம் நாம் கொடுக்கவில்லை, மக்கள் தான் கொடுத்து இருக்கிறார்கள்.ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று உதாரணம் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மறையவில்லை நம்முடன் தான் இருக்கிறார். கேப்டன் ஒருவர்தான் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கேப்டன்களை உருவாக்கியுள்ளார். நெஞ்சை நிமிர்த்து நில்லுங்கள் நீங்கள் கேப்டனின் தொண்டர்கள். கடலூர் நடந்த மாநாடு இன்றைக்கும் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்ய முடியாத அளவிற்கு இருக்கிறது. உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தீர்கள். மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறோம். 4×4 அறையில் அமர்ந்து அரசியல் செய்யவில்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும். ஒட்டுமொத்தமாக எல்லோரும் எதிர்பார்ப்பும் கட்சி தேமுதிக. அடுத்த வருகின்ற தேர்தலில் வெற்றி ஒன்றே நமது இலக்கு என நம் பயணத்தை தொடர்ந்து நடத்துவோம். கேப்டனை ஏமாற்றியவர்கள் பழித்து பேசியவர்கள், வாய்க்கு வந்தது பேசியவர்கள் எல்லாம் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என அறிவோம்” என்றார்.