×

CM விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?- பிரேமலதா விஜயகாந்த்

 

இரு மாநில பிரச்சனை என்பதால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது என தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது. நீட், காவிரி, மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சியினருடன் சென்று பிரதமரை முதலமைச்சர் சந்திக்க வேண்டும். கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. பெயர் மாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை, திட்டங்கள் தொடர்வதே முக்கியம். மக்கள் விரும்பும் திட்டங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர வேண்டும். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆறு முறை முதலமைச்சராக பதவி வகித்தவருமான கலைஞர் அவர்களின் நினைவு தினம் இன்று. அவரை இன்று இந்த அவையில் நினைவுகூர்ந்திருக்க வேண்டும். அது அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, இந்த அவைக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும். முன்னாள் முதலமைச்சரை சட்டப்பேரவையில் நினைவுகூர்வது அவையின் உயரிய மாண்பாகும்.

சட்டமன்றத்தில் வருகை பதிவேடுக்கு பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு ஒரு அவமதிப்பு என்றால் தமிழ்நாடே வெகுண்டெழும். CM விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா? இரு மாநில பிரச்சனை என்பதால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. அனைத்துக்கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. மக்கள் விரும்பும் திட்டங்கள் தொடர வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் 2 - 3 நாட்களில் நெல் கொள்முதல் செய்யப்படும், ஆனால் இந்த ஆட்சியில் பல நாட்கள் ஆகியும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் பல லட்சம் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்” என்றார்.