×

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்- பிரேமலதா விஜயகாந்த்

 

சிவகாசி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விசுவநத்தம் கிராமத்தில் ஏழை, எளியவர்களுக்கு தைப்பொங்கல் பரிசு வழங்கும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று தைப்பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன்  இருக்கிறார். நான் வரும்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு தான் வந்தேன். அனைவரையும் கேட்டதாக சொல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவருக்கு பேசுவதிலும், நடப்பதிலும் தான் சிரமம் உள்ள நிலையில், விரைவாக குணமடைந்து தேமுதிக தொண்டர்களை சந்திப்பார். 

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், என்பதை பெண் வர்க்கம் நிரூபித்துள்ளது. அதாவது அனைத்து துறைகளிலும் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பெண்கள் சாதித்து வருவதை நாம் பார்க்கிறோம். சக்தியின் ரூபம்தான் பெண்கள். வரும் காலத்தில் தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும், நல்ல எழுச்சியையும்,  நல்லாட்சியையும் அமைத்து, வறுமைக்  கோட்டிற்கு கீழ் யாரும் இல்லை என்பதை நிரூபித்து, ஒட்டுமொத்த பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வோம்” என்றார்.