“ஆதவ் மந்திரி இல்லை, முந்தி”- பிரேமலதா விஜயகாந்த்
ஆதவ் அர்ஜுனாவுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தாராபுரம் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சர் விஜய் அவர்களே, பாஜகவின் கிளைதான் தவெக என ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார். நேற்று மேடையில் நடந்த நாடகமும் உங்களுக்கே தெரியும். ஒரு போன் கால் வந்ததும், ‘Start.. camera... action..!’ என்றதும் வேட்பாளர் உடனே அழத் தொடங்கிவிட்டார். மிகப்பெரிய அளவில் டைரக்ஷன் நடந்துள்ளது. ஏன் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது? ஒருவர் இறந்தால் மட்டுமே நடக்கும் இடைத்தேர்தல், இப்போது ஏன் நடக்கிறது என்றால் நியாயம் இறந்துவிட்டது. மக்கள் அளித்த வாக்குக்கு மரியாதை கொடுக்காமல் கட்சித் தாவிய துரோகிக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை தாராபுரம் இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனாவுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கேப்டன் ஆன்மா பற்றி பேசுகிறார்.
அதிமுக வேட்பாளர்களை தங்கள் கட்சிக்கு இழுத்த உங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா மன்னிக்குமா? ஆதவ் மந்திரி இல்லை, முந்திரி. கேப்டன் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், எங்கள் விமர்சனம் வேறு மாதிரி இருக்கும்! முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். மாணவர்கள் எதிர்ப்புக்கு வாபஸ், ஆர்.ஐ.டி. தொடர்பான அறிவிப்புக்கு எதிர்ப்பு வந்தால் உடனே வாபஸ். இப்படி ‘வாபஸ், வாபஸ்’ என்று சொல்லும் போது, முதலமைச்சரிடம் நாங்கள் கேட்கும் கேள்வி இதுதான். உங்களுக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லையா? யாரோ எழுதிக்கொடுத்ததை முதலமைச்சர் விஜய் வாசிக்கிறார். நிச்சயம் அவரை மாட்டிவிட்டு சென்றுவிடுவார்கள் என நான் எச்சரிக்கிறேன்” என்றார்.