☰
×

 "கேப்டன முதல்ல ஆதவ் நேர்ல பார்த்து இருக்காரா? அவருக்கு அருகதை இல்லை" - பிரேமலதா விஜயகாந்த்

 

திமுக கூட்டணிக்கு பரப்புரை செய்ததை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமதா விஜயகாந்த், “தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மிகப்பெரிய வெற்றி பெறுவார். எப்போதும் மக்களுக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். குழந்தைகள், பேத்திகள் சொன்னார்கள் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம். ரீல்ஸ் போட்டுக்கொண்டு, போட்டோ ஷூட் செய்பவர்களை நம்ப வேண்டாம். கேட்படனின் ஆன்மாவை பற்றி பேச யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. கேப்டன முதல்ல ஆதவ் அர்ஜூனா நேர்ல பார்த்து இருக்காரா? விஜயகாந்தை நேரிலேயே பார்க்காதவர், ஆன்மா குறித்தெல்லாம் பேசலாமா? கேப்டன் குடும்பத்திற்கும், கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கேப்டனின் ஆன்மா குறித்து பேசக்கூடாது. எனவே வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை ஆதவ் அர்ஜூனா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.