×

“கார் கொடுக்குறது ஓகே தான்... ஆனா 90% எம்.எல்.ஏக்களிடம் கார் உள்ளது”- பிரேமலதா கருத்து

 

தேவை இருப்பவர்களுக்கு மட்டும் கார் வழங்கியிருக்கலாம்  என தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், “90 சதவீதம் எம்.எல்.ஏக்களிடம் கார் உள்ளது. இதற்கு பதில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்து இருந்தால் மகிழ்ந்து இருப்போம். இன்றைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. விவசாயிகள், ஏழைகள் என்று நிறைய உண்மையான தேவைகள் இருக்கும்போது, சட்டமன்றத்திற்கு வரும் 90 சதவீத உறுப்பினர்களுக்கு வாகனம் இருக்கும்போது, காருக்காக 150 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டுமா? தேவை இருப்பவர்களுக்கு மட்டும் கார் வழங்கியிருக்கலாம். 

அந்த இளைஞர் காவல்துறை அதிகாரியை திருப்பி அடிச்சதை என்னால ஏத்துக்க முடியல..சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறைக்கு பொதுமக்கள் மரியாதை தரணும். சென்னையில் நீர்நிலைகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.நீர்நிலைகளை தவெக அரசு தூர்வார வேண்டும். மணிமுத்தாறை தூர்வாரி கரையை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.