×

“சென்னை மெட்ரோவை ஆய்வு செய்யும் முதல்வர் விஜய் காவிரியை சென்று பார்க்க வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்

 

மக்கள் பிரச்னைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசை கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதலமைச்சர் விஜய் சென்னையில் மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்கிறார். காவிரியை முதலில் விஜய் பார்வையிட வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்த வேண்டும். மின்மிகை மாநிலமான தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு அதிகரித்துவிட்டது. மக்கள் பிரச்னைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.