×

 ''நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய் எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்'' - பிரேமலதா 

 

அ.தி.மு.க.வுக்கு த.வெ.க. மூலம் தண்டனை கிடைத்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டம் என்பதால் கட்சியின் செயல்பாடு, சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அமைச்சர் பதவிக்காக எல்லாரும் தவெக பக்கம் ஓடுகிறார்கள்  
சோபா செட்டுக்கும், பெட்டிக்கும் நாங்கள் ஆசைப்படவில்லை. ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய் என் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்.  தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத காரணத்தால் அதிமுக ICUவுக்கு சென்று விட்டது. அடுத்து தேமுதிக GENZ கூட்டம் விரைவில் அறிவுப்பு வரும்.. பணத்திற்கோ,  பதவிக்கோ, எந்த சோஃபா செட்டுக்கோ ஆசைப்படாமல், நாம் பயணிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக பயணிக்கிறோம். கூட்டணி தர்மத்துடன் நாம் எடுத்துக்கொண்ட பாதையில் உறுதியுடன் இருக்கிறோம் என்பதற்கு இதுதான் அத்தாச்சி.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. தற்போது நடக்கும் அவலங்களைப் பட்டியலிட்டால் ஒருநாள் போதாது. குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ளனர். தேமுதிகவிற்கு துரோகம் செய்த அதிமுகவிற்கு தவெக மூலம் தண்டனை கிடைத்துள்ளது.தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத காரணத்தால் அதிமுக ICUவுக்கு சென்று விட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தவெகவில் இணைவது தமிழ்நாட்டுக்கே தலைகுணிவு” என்றார்.