×

“அண்ணன் ஸ்டாலின் தான் மீண்டும் அரியணையில் ஏறுவார்”- பிரேமலதா 

 

அண்ணன் ஸ்டாலின் தான் மீண்டும் அரியணையில் ஏறுவார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்ற பின் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது நாளை மறுநாளுக்குள் இறுதியாகும். இதற்கான உத்தேச பட்டியலை வழங்க உள்ளோம். 10 தொகுதிகளிலும் ஏப்ரல் 1ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அண்ணன் ஸ்டாலின் தான் மீண்டும் அரியணையில் ஏறுவார்” என்றார்.