×

”விஜய்யை உடனே செய்தியாளர் சந்திப்புக்கு கூப்பிடுங்க”- பிரேமலதா ஆவேசம்

 

விஜயை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூப்பிட்டு உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்க வேண்டும், அதை தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சி மற்றும் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி குறித்து பரபரப்பு வருகிறது அதை செய்தியாளர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நேரம் நிறைய இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அறிபறி ஏற்படுத்துவது செய்தியாளர்கள் தான். செய்தியாளர்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன், உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து பத்திரிக்கையாளர் ஆகிய உங்களை அழைத்து தலைமை  கழகத்தில் அறிவிப்பேன்.

தேமுதிகவிற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ உறுப்பினர்கள் யாரை விரும்புகிறார்களோ தேமுதிகவிற்கு எது நல்லதோ அந்த வகையில் ஒரு தாயாக இருந்து ஒரு கழகத்தை கட்டி காக்க வேண்டிய பொறுப்பு கடமை கேப்டன் என் கையில் கொடுத்து சென்று இருக்கிறார். சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுப்பேன், அறிவிப்பேன். பிரதமர் மோடி கூட்டணி கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் கலந்து இருக்கிறார்கள். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இது கேப்டன் கட்சி, இங்கு யாரையும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் குறை சொல்லி கொண்டு இருந்தது போக ஒன்றாக இணைந்திருப்பது குறித்த கேள்வியை எடப்பாடி பழனிச்சாமி இடமும் டிடிவி தினகரன் இடம் தான் கேட்க வேண்டும் என்னிடம் கேட்டால் அது சரியாக இருக்காது, ஆளும் கட்சியை அனைத்து கட்சிகளும் குறை சொல்வது வழக்கம் தான், அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். ஜனநாயகன் படத்தில் உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா என்பதை விஜய் தான் கூற வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும், அதற்கு உரியவர் பதில் சொல்ல வேண்டியவர் விஜய். விஜயை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூப்பிட்டு எல்லா சந்தேகத்தையும் கேட்க வேண்டும், அதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.