×

"அந்த கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பம்’’- சாபம் விட்ட பிரேமலதா

 

தேமுதிகவிற்கு 6 தொகுதி என எந்த கட்சி சார்பாக அறிவிப்பு வந்ததாக சொல்கிறீர்களோ, இதுவே அந்த கட்சிக்கு அழிவுக் காலத்தை உண்டாக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ தேசிய ஜனநாய கூட்டணியில் தேமுடிகவுக்கு 6 சீட் வழங்கப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு தகவலை ஒரு கட்சி சொல்லியிருந்தால், அந்த கட்சி அழிவை நோக்கிதான் செல்லும், அடித்து சொல்கிறேன்... இப்போதைக்கு அதிமுகவும், பாஜகவும்தான் கூட்டணி. அந்த கட்சியிலுள்ள இரு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. அவ்வளவுதான்... இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நிச்சயம் உரிய நேரம் வரும்போது நாங்கள் அறிவிப்போம்” என்றார்.