×

மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை - பிரேமலதா பேட்டி!

 

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை.மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக விஜய் ஏற்கெனவே கூறிய நிலையில் பிரேமலதா வரவேற்பு  தெரிவித்துள்ளார்.