“ஆதவ் ஆர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலைமை வரும்”- பிரேமலதா விஜயகாந்த்
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “தினமும் டிவியில் பார்க்கிறேன், உங்களால் ஒரு ஊரில் கூட உங்கள் முகத்தைக் காட்டி வாக்கு சேகரிக்க முடியவில்லை. மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். உங்கள் வெற்றிக்காக உழைத்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு கட்சிக்கு செல்கிறீர்கள் என்றால் மதுராந்தகம் மக்கள் உங்களை ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமாகத்தான் பார்ப்பார்கள். எந்த கட்சி உழைத்து உங்களை வெற்றி பெற செய்தார்களோ, அந்த கட்சிக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டு வேறு கட்சிக்கு செல்கிறீர்கள் என்றால் மதுராந்தகம் மக்கள் உங்களை ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமாகத்தான் பார்ப்பார்கள். ஆதவ் ஆர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலைமை வரும்.
தம்பி ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் எழுந்து பேசினாலே எப்போதும் சண்டைதான். அதையே நான் சட்டப்பேரவையிலும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் திமுக மீது இருக்கும் ஈகோவையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையிலேயே உரையாற்றினார். மக்கள் பிரச்சனைகளைப் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் ஒரு வார்த்தையை விட்டுட்டுப் போயிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாட்டிக்கப் போறீங்க. தவளை தன் வாயால் கெட்ட கதையாக சிக்கிக்கப் போறீங்க. ரிசல்ட் வரும் அன்னிக்கி ஆதவ் அர்ஜுனா என்ன பேசப் போறார்னு கேட்க நான் வெயிட்டிங்- பிரேமலதா விஜயகாந்த்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி, இன்று ‘தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் என முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். முதலமைச்சர் விஜய் விளம்பரத்தில் நடித்த நிறுவனத்தின் பெயரில் தமிழகம் முழுவதும் மோதிரம் வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த மதுராந்தகம் தொகுதி மக்களும் மரகதம் குமரவேலுக்கு பாடம் புகட்ட வேண்டும். மாபெரும் போராட்டத்தை நடத்தி முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை பெற்றுத்தருவோம்” என்றார்.