×

“நீங்க அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை..”- விஜய்யை சீண்டிய பிரேமலதா

 

சேலத்தில் ஒரே மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், பிரேமலதா பரப்புரை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “கூட்டணியில் இருந்து யாரையும் வெளியேறவிடாமல் கட்டி காத்துள்ளார் ஸ்டாலின். கூட்டணிக்குள் தேமுதிகவை அழைத்து Game Changer-ஆக மாறினார் அண்ணன் ஸ்டாலின். என் அண்ணன் ஸ்டாலின் தான் பெண் இனத்தின் பாதுகாவலர். பெண் இனத்தை உயர்த்தபோகும் சிறந்த தலைமகன். எதிர்க்கட்சியே இல்லை என்பதை உணர்த்தும் தேர்தல் இது. 234 தொகுதிகளை பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்பதை இந்த தேர்தல் எதிராளிகளுக்கு உணர்த்தும். ரூ.8,000 கூப்பன் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். புதிதாக ஒரு தம்பி வந்திருக்கிறார். முதல் அடி வைக்கும் பொழுது நீங்கள் எதிராளிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது.இது 75 வருட கட்சி. முதலில் வாக்கு வங்கியை நிரூபியுங்கள், நீங்கள் அரசியலில் லாலிபாப் சாப்பிடுகின்ற சிறு குழந்தை. விஜய் தம்பி அரசியலில் சின்ன பையன். ஹீரோ இல்லை. அரசியல் வேறு, சினிமா வேறு. களத்தில் இறங்கி மக்களுக்காக போராடுபவன் தான் தலைவன், எங்கோ உட்கார்ந்து கொண்டு
கை காட்டுவது அல்ல அரசியல். 

எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை பண்பு இல்லை. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற நிலையை உருவாக்க முயற்சி நடக்கிறது. தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது” என பேசினார்.