☰
×

"செஞ்சி சிறுமி விவகாரத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்"- பிரேமலதா விஜயகாந்த்

 

செஞ்சி சிறுமி மாயமாகி பல நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்காதது மக்களுக்கு அச்சத்தை தந்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

விருத்தாசலத்தில்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "செஞ்சி சிறுமி மாயமாகி பல நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்காதது மக்களுக்கு அச்சத்தை தந்துள்ளது. சட்டம், ஒழுங்கு எந்தளவுக்கு கேட்டுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். நீங்களெல்லாம் நினைச்சிருக்கலாம் நான் ஏதோ கல்யாண பத்திரிக்கை கொடுக்க போயிருக்கேன்னு... ஆனா நான் முதல்வரை சந்திச்சு சொன்னது வேற.... மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு ஓட்டு போட்ட மக்கள் இதை யோசிங்க..  உண்மையிலேயே இந்த ஆட்சி மாற்றமா? நம்ம சொன்ன கோரிக்கைகள் நிறைவேறி இருக்கான்னு மக்கள்தான் சொல்லணும்" என்றார்.