கூட்டணி பற்றி முடிவெடுக்க பிரேமலதாவிற்கு முழு அதிகாரம் - மாநாட்டில் சிறப்பு தீர்மானம்
Updated: Jan 9, 2026, 20:16 IST
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானங்கள்
இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.
கரும்புக்கு உரிய நியாயமான விலையை தமிழ்நாடு அரசே நிர்ணயிக்க வேண்டும்.
அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில் விஜயகாந்திற்கு ‘மணிமண்டபம்' அமைத்துத்தர தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும்
தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்
தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.