ராகுல் காந்தியின் தேர்தல் வியூக வகுப்பாளர் விஜய்யுடன் சந்திப்பு
Dec 5, 2025, 17:10 IST
சென்னையில் தலைவர் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தார்.
சென்னையில் தலைவர் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தார். ராகுல் காந்தியின் பிரதிநிதியாக விஜய்யை சென்று சந்தித்துள்ளார் சென்ற பிரவீன் சக்ரவர்த்தி. பட்டினப்பாக்கத்தில் உள்ள தலைவர் விஜய் வீட்டில் தற்போது சந்திப்பு நடைபெற்று வருகிறது. காங்கிரஸில், ராகுல்காந்தி புதிதாக துவங்கிய data analyst பிரிவின் தலைவராக செயல்பட்டுவருபவர் பிரவீன் சக்ரவர்த்தி. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் நடைபெற்று வரும் இச்சந்திப்புக்கு முன், விஜய்யின் தொண்டர்கள் கூட்டம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு கருத்து பதிவிட்டு இருந்தார் பிரவீன் சக்கரவர்த்தி.