×

அதைப்பற்றி பேசியது பிரச்னையா? வருவாயில் 21% வட்டிக்கே செலவாகிவிடுகிறது- பிரவீன் சக்கரவர்த்தி

 

நான் பேசுவது தமிழகத்தின் கடன் பிரச்சினையைப் பற்றித்தான். அதைப்பற்றி பேசியது பிரச்சினையா? என காங்கிரஸ் மேலிட நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, “நான் பேசுவது தமிழகத்தின் கடன் பிரச்சினையைப் பற்றித்தான். ஆர்பிஐ புள்ளிவிவரப்படி கடந்த 15 ஆண்டுகளில் தமிழக கடன் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே காலகட்டத்தில் தமிழக ஜிடிபி 4 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது. கடன் பிரச்சினையா? அதைப்பற்றி பேசியது பிரச்சினையா? தமிழக வருவாயில் 21% வட்டிக்கே செலவாகிவிடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.