×

“இன்ஸ்டாகிராம் வெற்றியா? திமுகவினருக்கு மக்களின் மனநிலை புரியவில்லை”- பிரவீன் சக்ரவர்த்தி 

 

தமிழகத்தில் TVK-வின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான வெற்றி என்று கூறி திமுக நிராகரிக்க விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், “தமிழகத்தில் TVK-வின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான வெற்றி என்று கூறி திமுக நிராகரிக்க விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன், அவர்கள் அந்த முட்டாள்களின் சொர்க்கத்திலேயே இருக்கட்டும். அவர்களுக்கு மக்களின் மனநிலை புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.