×

தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இருந்து வருகிறது. இருப்பினும், விஜய்யுடன் ராகுல்காந்தி போன் மூலமும், பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த காரணங்களினால், விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியில் சேர உள்ளதாக தகவல்கள் பரவியன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அதை மறுத்துவிட்டது. இந்த நிலையில், சமீபத்தில் கோவை வந்த பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார்.