☰
×

தமிழ்நாட்டில் தெருவில் இறங்கிப் போராட உள்ளேன்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள் - பிரகாஷ்ராஜ்

 

எஸ்.ஐ.ஆர்க்கு எதிராகத் தமிழ்நாட்டில் தெருவில் இறங்கிப் போராட உள்ளேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் குறித்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “தமிழ்நாட்டில் மட்டும் 74 லட்சம் வாக்காளர்களை குறி பார்த்து டெல்லியில் இருந்து கொண்டு ஞானேஷ்குமார் டெலிட் செய்திருக்கிறார். முதலமைச்சர் விஜய்யிடம் கேட்கிறேன், ஏன் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டேங்கிறீங்க? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்க வில்லை என்பது எனக்கு புரியவில்லை? யார் அனுமதித்தாலும் சரிதான் அனுமதிக்காவிட்டாலும் சரிதான் டெலிட் செய்யப்பட்ட இந்த 74 லட்சம் வாக்காளர்களையும் ஒன்றாக திரட்டினால் பெரிய அளவில் போராட்டம் செய்யப் போகிறேன். எஸ்.ஐ.ஆர்க்கு எதிராகத் தமிழ்நாட்டில் தெருவில் இறங்கிப் போராட உள்ளேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். இது மக்களோட பிரச்சனை, ஒரு கட்சியோட பிரச்சனை கிடையாது, ஒரு பொறுப்பா நடந்துகொள்ளுங்கள், நீங்கள் வேண்டுமென்றால் போராட்ட களத்திற்கு வந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள், எங்களுக்கு கவலை கிடையாது” என்றார்.