'பிரகதி-50' புதிய திட்டம் தொடக்கம்: தூய்மைக்கான 50 மாதிரி நகரங்களை உருவாக்க மத்திய அரசு அதிரடி!
தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறம் 2.0 இன் கீழ் 24 மாநிலங்களில் உள்ள 50 மாதிரி நகரங்களை உருவாக்க 'பிரகதி-50' என்ற புதிய முன்னெடுப்பு புது தில்லியில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் நகர்ப்புற தூய்மை, திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மையை கண்காணித்து உள்ளாட்சி அமைப்புகளை முன்மாதிரியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஆறு முக்கிய நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தூய்மைக்கான 50 மாதிரி நகரங்களை உருவாக்கும் பிரகதி-50 திட்டத்தை அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் 24 மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 50 நகரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் பிற பகுதிகளுக்கு தூய்மைக்கான முன்மாதிரி நகரகங்களாக திகழும் வகையில் உயர் தரநிலையை மேம்படுத்துவதை இத்திட்டத்தின் நோக்கமாகும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
வழக்கமான துப்புரவு பணிகளுடன் நிலையான உயர்செயல்திறன் கொண்ட தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின கீழ் முக்கியத்துவம் வாய்ந்த நகரகங்கள் சுற்றுலாத்தளங்கள், பொருளாதார மையங்கள் இணைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு செயல்முறையின் மூலம் நகர்ப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, துப்புரவுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.