இன்று காலை வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 32 பேர் பலி; 700 பேர் காயம்..!
வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு மேற்கே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பேரழிவு நிகழ்ந்துள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 700 பேர் காயம் அடைந்துள்ளனர்.வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸில் உள்ள கட்டடங்களை குலுங்கியது.
அந்நாட்டின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.வெனிசுலாவில் சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் தலைநகர் கராகஸில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கரீபியன் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதை வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ உறுதிப்படுத்தினார். இடிபாடுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 700 பேர் காயம் அடைந்துள்ளனர்.