☰
×

மின்தடையா..? இனி கவலை இல்லை... இனி வாட்ஸ் ஆப்பிலும் புகார் அளிக்கலாம்..! 

 

மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot" வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், மின்சார புகார்களை பதிவு செய்ய 94987 94987 என்ற வாட்ஸ் அப் எண்ணில் “HI” என பதிவிட வேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார புகார்களை பதிவு செய்ய 94987 94987 என்ற வாட்ஸ் அப் எண்ணில் “HI” என பதிவிட வேண்டும். அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார். 

பொதுமக்கள் பின் வரும் வாட்சப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Please message in WhatsApp to raise your complaints in TNEB.

WHATSAPP எண் : 94987 94987 pic.twitter.com/fnNNZG2qEW

— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 2, 2026