×

நாகையில் நாளை மின்தடை

 

நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விஜய் செல்லும் வழியில், அவர் செல்லும் போது உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க. மாவட்டச் செயலாளர் மின்சார வாரியத்தில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.