☰
×

திருவண்ணாமலையில் வரும் 6ஆம் தேதி முதல் 7 மணி நேரம் வரை மின் தடை அறிவிப்பு

 

திருவண்ணாமலையில் வரும் 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 23 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக 7 மணி நேரம் வரை மின் தடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை 23 துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக 7 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின் தடை நேரம் அதிகரிக்கப்படுகிறதா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் தடை நேரத்திலும் வி.வி.ஐ.பி வீடுகள், நீதிமன்ற வளாகங்களில் மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், ஆங்காங்கே மின் தடை நிலவுகிறது. இதனால் தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மின்சார சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மின்சார வாரியத்தின் புதிய வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 94987 94987 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு “Hi" என அனுப்பி மின்தடை உள்ளிட்ட புகார்களைப் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.