×

விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் மின்வெட்டு..!

 

தவெக தலைவர் விஜய் நாமக்கல் பிரசாரம் முடிந்ததும், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூரில் மக்களை பார்த்ததும் விஜய்யின் வாகனம் நின்றது. வாகனத்தின் மேலே நின்றபடி மக்களை நோக்கி அவர் கையசைத்து தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். அப்போது அவருக்கு வெற்றிலை மாலை பரிசாக வழங்கப்பட்டது.

விஜய் பிரசாரத்தின்போது, கூடியிருந்த கூட்டத்தினரில் 15 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் கரூரில், விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் மின் நிறுத்தம் செய்ய சொல்லி கோரிக்கை வைக்கப்படாவிட்டாலும், வேலுச்சாமிபுரம் பகுதியில் மரக்கிளைகளில் இளைஞர்கள் அமர்ந்துள்ளதால், அந்த பகுதியில் மின்கம்பிகள் செல்வதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். விஜய் பிரச்சாரம் முடித்துவிட்டு செல்லும் வரை அந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.