×

“த்ரிஷா- விஜய் நட்பை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது கண்டனத்துக்குறியது”

 

நடிகை குறித்த அதிமுக நிர்வாகி ஆர்.பி. உதயகுமாரின் கருத்துகளைக் கண்டித்து, மதுரை முழுவதும் திரிஷா ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.


ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த த.வெ.க. புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தூத்துக்குடி மாவட்ட போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது; போராட்டம் நடத்துவோம்."

- நடிகை குறித்த அதிமுக நிர்வாகி ஆர்.பி. உதயகுமாரின் கருத்துகளைக் கண்டித்து, மதுரை முழுவதும் திரிஷா ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். pic.twitter.com/T5lDKyvQy4

— Suresh Elangovan (@sureshelangov12) August 11, 2026


இந்நிலையில் நடிகை குறித்த அதிமுக நிர்வாகி ஆர்.பி. உதயகுமாரின் கருத்துகளைக் கண்டித்து, மதுரை முழுவதும் திரிஷா ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், “இருவரின் நட்பை கொச்சைபடுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்திற்குரியது. யாகவராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள் அமைச்சரே!!! மாண்பு தவற வேண்டாம்!!! எங்கள் அன்பு அக்கா திரி அவர்களை யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.