சிறகடிக்க ஆசை சீரியலில் பிரௌன் மணி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல சின்னத்திரை நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்..!!
Jul 29, 2026, 09:45 IST
சென்னை வடபழனியில் வசித்து வரும் வி.சி. ஜெயமணி (76) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான விசி. ஜெயமணி(76) மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
இவர் 'திருமதி செல்வம்' தொடரில் பூங்காவனம் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தும், அண்மையில் சிறகடிக்க ஆசை தொடரில் மலேசியா மாமா வேடத்தில் நடித்து கவனம் பெற்றார்.
இவர் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.