பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை..! வெளியான கடைசி புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்த கே.ராஜன், நேற்று (மே 17) மாலை, சென்னை அடையாறு ஆற்றில் குதித்து விபரீத முடிவை தேடிக் கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவரது மரணம் குறித்து அடையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது கடைசி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜனின் இந்த முடிவுக்கு கடனோ அல்லது நிதி நெருக்கடியோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அவர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அத்துடன், நடிகர்கள், நடிகைகளின் சம்பள உயர்வு, தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நிதி ரீதியிலான பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு மேடையிலும் பேசி வந்திகாவார் தான் கே ராஜன் அவர்கள்.
அத்துடன் ஒரு திரைப்படத்தை எப்படி குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்பது குறித்தும் இளம் இயக்குநர்களுக்கு ஆலோசனைகளையும் கே.ராஜன் வழங்கி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.