“நாங்கள் நினைத்தது வேறு, இன்று நடந்தது வேறு”- இபிஎஸ் செயலால் பூவை ஜெகன் மூர்த்தி அதிருப்தி
Mar 25, 2026, 17:51 IST
அதிமுக முடிவால் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு ட்தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, “புரட்சி பாரதம் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கேட்டோம். ஆனால் ஒரு தொகுதி தான் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு இதில் திருப்தி இல்லை. எனினும், இந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு முன்பு நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்த பின்னர் அறிவிப்போம். நாங்கள் நினைத்தது வேறு, இன்று நடந்தது வேறு. நாளை காலை நிர்வாக குழு கூடி முடிவு செய்யும்” என்றார்.