×

துணை வட்டாட்சியருக்கு கொரோனா உறுதி…பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் மூடல்!

தமிழகத்தில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக துணை வட்டாட்சியருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று
 

தமிழகத்தில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக துணை வட்டாட்சியருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் பூவிருந்தமல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் மூலம் அலுவலகத்துக்கு வந்து செல்லும் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் என்பதால், அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி வட்டாட்சியர் தலைமையில் நடந்துள்ளது. இதனையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அலுவலகம், பூவிருந்தவல்லி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.