×

 சிறையில்  இலாகா இல்லாத அமைச்சர் ;  நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார் பொன்முடி
 

 

 உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில அண்ணாமலை தனது பக்கத்தில், ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.