×

அமைச்சர் பொன்முடி தம்பி தியாகராஜன் மறைவு - ராமதாஸ் இரங்கல்

 

அமைச்சர் பொன்முடி தம்பி தியாகராஜன் மறைவுக்கு ராமதாஸ்  இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடியின் சகோதரர் டாக்டர்.தியாகராஜன் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில்  இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை விழுப்புரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.மருத்துவர் தியாகராஜன் சிறந்த மருத்துவர். பழகுவதற்கு நல்ல மனிதர். பணத்தை பெரிதாக மதிக்காமல் மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர். மருத்துவர் தியாகராஜனை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.