×

பொங்கல் பரிசு திட்டம்: இன்று மாலை தொடக்கி வைக்கிறார் முதல்வர்!

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 பணத்தை உயர்த்தி ரூ.2,500 ஆக வழங்கப்போவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் படி, 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
 

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 பணத்தை உயர்த்தி ரூ.2,500 ஆக வழங்கப்போவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன் படி, 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இலங்கை தமிழர்களின் ரேஷன் அட்டைகளுக்கும் , அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய சர்க்கரை ரேஷன் அட்டைகளுக்கும் கூட பணம் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். ஜனவரி 4ம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.