×

அரசியலில் பரபரப்பு..! புதிய கட்சி தொடங்க போகிறாரா அண்ணாமலை?

 

பா.ஜ., அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பெயர் ஏதும் குறிப்பிடாமல், 'பியர்லெஸ் மைன்ட்ஸ் ஹேவ் நோ லிமிட்ஸ்' என ஆங்கிலத்தில், வாசகங்களை குறிப்பிட்டு கடந்த மாதம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 

தற்போது அண்ணாமலை "We the Leaders" என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பை விரிவுபடுத்தி ஒரு இயக்கமாக மாற்றுவது அல்லது புதிய பெயரில் மற்றொரு இயக்கத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இயக்கத்தின் மூலம் அண்ணாமலையின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகும் நபர்களை ஒரே அணியாக இணைப்பதோடு, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அதிகளவில் ஈர்த்து அவர்களுக்கு அரசியல் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், தனக்கென ஒரு அரசியல் தளத்தை உருவாக்கினால் மட்டுமே தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் இருப்பதாக வெளியாகியுள்ளன. அண்ணாமலை தகவல்கள் இதன் காரணமாக புதிய கட்சி தொடங்கும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளன. விவாதங்கள்

இந்நிலையில், நேற்று 'தலைவா தரணி ஆளவா' என்ற பெயரில், அவரது ஆதரவாளரும், முன்னாள் பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி பெயரில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து, பாலாஜி உத்தமராமசாமி கூறுகையில், ''ஜூன் 4ல் அண்ணாமலைக்கு பிறந்தநாள். அதற்காக, இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன். அவர், கட்சி துவங்குவது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.