×

அரசியலில் பரபரப்பு..! செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்! 

 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் 42 பேர் டெல்லி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க., – காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், 180 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்றும், தேர்தல் முடிந்த பின்பும் உண்மையை சொல்லாமல் இருப்பது கட்சிக்கே துரோகம் செய்வதாக இருக்கும் என்பதால், இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை அறிந்திருந்த போதும், கட்சி கட்டளைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றியதாகவும், உண்மை நிலையை மறைத்து, தவறான தகவலை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என, த.வெ.க., தரப்பிலிருந்து அழைப்பு இருந்தபோதும், ஒரு நல்ல வாய்ப்பை முறியடித்தவர்கள் மீது அகில இந்திய தலைமை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.