"Political vijay is more powerful than actor vijay!"- அருண்ராஜ் பேட்டி
அண்ணாமலை வேண்டுமானால் நாயாக இருக்கலாம், நாங்கள் நாய்கள் இல்லை, 6 அறிவு இருக்கும் மனிதர்கள் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “தவெக கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும். அண்ணாமலை வேண்டுமானால் மோடியின் நாயாக இருக்கலாம். ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது... 6 அறிவு இருக்கும் மனிதர்கள். Political vijay is more powerful than actor vijay. வேற எந்த கட்சிக்காவது காசு கொடுக்காம இவ்வளவு கூட்டம் வருமா? அப்ப மக்கள் ஆதரவு யாருக்கு இருக்குனு தெரிந்துகொள்ளுங்கள். தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தால் மீடியா வெளிச்சம் கிடைக்கும். ஆனால் விஜய் சொல்வதை போல் நாங்கள் டீசண்ட் அரசியல் செய்கிறோம். நடிகருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரல... அண்ணன் விஜய் இப்பொழுது நடிகர் இல்லை, முன்னாள் நடிகர். நடிப்பை விட்டுவிட்டு மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் நடிகர் விஜய்யை பார்க்க வரவில்லை. அவர்கள் தவெக தலைவர் விஜய்யை தான் பார்க்க வந்தார்கள். இந்த புரிதலுடன் பேச வேண்டும். தவெகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்கும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் தமிழ்நாடு.திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தேவையில்லாமல் இரண்டு கட்சிகள் ஆதாயம் தேட பார்க்கின்றன. அவர்கள் யாரென்று மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.” என்றார்.