×

‘குளிர்காய பெரியார் சிலையை எரித்த நபர்…’ பரபரப்பு வாக்குமூலம்!

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீவைத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரம் குடியிருப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு பெரியாரின் மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை நேற்றுமுன்தினம் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தியதாக டபோலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வாகன டயர் ஒன்றில் நெருப்பை கொளுத்திவிட்டு தீ வைத்தது தெரியவந்தது. இதுபோன்ற விஷம வேலையில் ஈடுபட்ட
 

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீவைத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரம் குடியிருப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு பெரியாரின் மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை நேற்றுமுன்தினம் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தியதாக டபோலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வாகன டயர் ஒன்றில் நெருப்பை கொளுத்திவிட்டு தீ வைத்தது தெரியவந்தது. இதுபோன்ற விஷம வேலையில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதிகள் மற்றும் திராவிட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் பெரியார் சிலைக்கு தீ வைத்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில்,முருகவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் குளிர் காய்வதற்காக டயரை பற்ற வைத்தேன். அதை தூக்கி எரியும் போது பெரியார் சிலை மீது விழுந்து விட்டது என்று கூறியுள்ளார். இருப்பினும் முருகவேலை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.