ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 'பராசக்தி' பட டிக்கெட்டை பரிசளித்த போலீசார்
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரஉள்ள பராசக்தி திரைப்படத்திற்கான டிக்கெட் கொடுத்து ஹெல்மெட் அணிந்தவர்களை மோட்டிவேட் செய்து அதிர்ச்சி தந்த விழிப்புணர்வு நிகழ்வு தஞ்சையில் நடைப்பெற்றது.
தஞ்சையில் மாநகர காவல்துறை தனியார் தொண்டுநிறுவனத்துடன் இணைந்து பல பரிசுகள் வழங்கி தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி வருகிறது. இதன் காரணமாக தஞ்சையில் 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிய துவங்கி உள்ளனர். 100 சதவீதமாக உயர்த்த மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தனியார் தொண்டு நிறுவனம், தஞ்சை ஆற்று பாலம் ரவுண்டானா பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி இந்தாங்க பிடிங்கனு சொல்லி சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்திற்கான டோக்கனை வழங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் தலா 3 டிக்கெட் வீதம் 50 பேருக்கு வழங்கப்பட்டது