காவல் நிலையத்தில் இளைஞர் மீது கும்பலாக தாக்குதல் நடத்திய போலீஸ்
Jul 4, 2025, 19:49 IST
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் மறைவதற்குள் மற்றொரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் இளைஞர் விக்கி என்பவர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தனது புகார் தொடர்பாக முறையிட சென்றபோது இளைஞரை போலீசார் துரத்தி துரத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என கள்ளக்குறிச்சி எஸ்பி கூறியுள்ளார்.